மாலைதீவில் இருந்து திரும்பிய ஜனாதிபதி செய்த முதல் காரியம்; மஹிந்தவின் வீட்டில் கொண்டாட்டம்

0
79

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது 78ஆவது பிறந்தநாளை கடந்த 18ஆம் திகதி கொண்டாடியிருந்தார். அவரது பிறந்தநாள் நிகழ்வில் அவருக்கு நெருங்கிய பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டுள்ளார். இதன்போது முன்னாள் ஜனாதிபதிக்கு கேக் ஊட்டி ஜனாதிபதி வாழ்த்துக் கூறியுள்ளார்.

மாலைதீவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் முதல் நிழ்வாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்த பிறந்தநாள் நிகழ்விலேயே கலந்துகொண்டுள்ளார்.

18ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான விஜேராமவிற்குச் சென்ற ஜனாதிபதி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட ஏழு பேரே காரணமென அண்மையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த பின்புலத்திலேயே ஜனாதிபதி இந்த பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.