பொறுப்புக் கூற வேண்டியவர்களை அடையாளப்படுத்தும் நாமல் ராஜபக்ச

0
138

மக்கள் ஆணை மூலம் தெரிவான கோட்டாபய ராஜபக்ச வரிகளை குறைக்க நடவடிக்கை எடுத்தமை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

தமது கட்சி உறுப்பினர்கள் மாத்திரமின்றி ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் நாட்டின் பொருளாாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி வீதம் 

நாட்டில், 2015 இல் நடைபெற்ற   ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார். அந்த நேரத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக பதிவாகியிருந்தது.

கோட்டாபய எடுத்த முடிவு : பொறுப்புக் கூற வேண்டியவர்களை அடையாளப்படுத்தும் நாமல் | Sri Lanka Economic Crisis Gotabaya Govt

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டளவில் பொருளாதார வளர்ச்சி ஏழு வீதத்திலிருந்து இரண்டு வீதமாக குறைவடைந்திருந்தது.

இவ்வாறாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன பொறுப்புக் கூற வேண்டும்.

இந்நிலையிலேயே, 2019 இல், ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச தமது கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப, வரிகளை குறைத்திருந்தார்.

எனவே, மக்கள் ஆணை மூலம் தெரிவான கோட்டபாய ராஜபக்ச வரிகளை குறைக்க நடவடிக்கை எடுத்தமை பொருளாதார நெருக்கடிக்கு காரணமென கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சியினர் எந்த அடிப்படையில் கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தை தவறான முறையில் வெளிக்காட்ட முயற்சிக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.