செங்கடல் பகுதியில் இஸ்ரேல் கப்பல்களை குறிவைக்கும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

0
86

 செங்கடல் பகுதியில் இஸ்ரேலின் கப்பல் ஒன்றினை யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ஜப்பானிலிருந்து இயங்கும் இஸ்ரேல் கப்பலை கைப்பற்றியுள்ளதை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இஸ்ரேலிய வர்த்தகர் ஒருவருக்கும் சொந்தமான கலக்ஸி லீடர் கப்பலில் 22 பேர் காணப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியிலிருந்து இந்தியாவிற்கு சென்று கொண்டிருந்த கப்பலையே ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இஸ்ரேலின் கொடியுடன் பயணிக்கும் கப்பல்களை தாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதை அவர்கள் அறிவித்துள்ளனா என தெரிவித்துள்ள அல்ஜசீராவின் செய்தியாளர் ,

இஸ்ரேல் போன்ற நாடுகளிற்காக பணியாற்றவேண்டாம் என சர்வதேச மாலுமிகளை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.