விருதுடன் தாயகம் திரும்பிய முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்..

0
103

ICC “Hall of Fame”விருது பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா, தனது விருதுடன் இன்று (2023.11.18) காலை நாட்டை வந்தடைந்தார்.

சமீபத்தில் இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை வென்ற நான்காவது இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர் அரவிந்த என்பது விசேட அம்சமாகும்.