இன்றுமுதல் தாமரை கோபுரத்தில் ‘பேஸ் ஜம்ப்’ சாகச விளையாட்டு ஆரம்பம்!

0
55

இன்று சனிக்கிழமை (18) முதல் கொழும்பு தாமரை கோபுரத்தில் ‘பேஸ் ஜம்ப்’ என்ற சாகச நிகழ்வு ஆரம்பிக்கப்படும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றும் நாளையும் (19) காலை 9 மணி முதல் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

6 சர்வதேச பேஸ் ஜம்ப் வீரர்கள்

அதேவேளை நேற்று (17) இதற்கான முன்னோடி நிகழ்வில் 6 சர்வதேச பேஸ் ஜம்ப் வீரர்கள் கலந்துகொண்டு சாகச நிகழ்வை நடத்தினர்.

தாமரை கோபுரத்தில் 29வது மாடியில் உள்ள கண்காணிப்பு தளத்தில் இருந்து பேஸ் ஜம்ப் வீரர்கள் சாகசத்தை ஆரம்பித்து கோபுரத்தின் வளாகத்தை அடைவார்கள்.

இந்ந்லையில் தாமரை கோபுர நிர்வாகத்தினர் இந்த நிகழ்வை கண்டுகளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

அதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி ரெட்புல் ஸ்ரீலங்கா ஸ்கைடைவ் குழுவைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் சாகசத்தை நிகழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.