இலங்கை கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் மன்றத்துக்கு 3000 சைபர் குற்ற புகார்கள்

0
139

சைபர் குற்றங்கள் (Hacking) தொடர்பாக புகாரளிக்க இலங்கை கணினி அவசரநிலைப் பதிலளிப்பு மன்றத்துக்கு (CERT) மாதத்திற்கு சுமார் 3000 தொலைப்பேசி அழைப்புகள் பெறப்படுவதாக அதன் தலைமை தகவல் பொறியியலாளர் நிரோஷ ஆனந்த தெரிவித்துள்ளார்.

நேற்று (09) இடம்பெற்ற இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் நடைபெற்ற இணைய பாதுகாப்பு தொடர்பான ஊடக விழிப்புணர்வு செயலமர்வின் போதே பாதுகாப்புப் பொறியியலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“குறித்த நிறுவனத்திற்கு தினமும் 25 தொடக்கம் 30 பேர் வருகை தந்து முறைப்பாடுகளை சமர்ப்பிக்கப்படுகின்றனர். நூற்றுக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் மின்னஞ்சல் மூலம் பெறப்படுகின்றது.

கடந்த 2022ஆம் ஆண்டில் இலங்கையில் 40,000 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ள நிலையில் இவ்வாண்டில் 60,000 சைபர் குற்றங்கள் CERTக்கு பதிவாகியுள்ளது.

இணையதளங்கள், ஃபேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (Whats app), டிக்டோக் (Tiktok) மற்றும் பிற சமூக ஊடகங்கள் சைபர் குற்றங்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்கள், வீடியோக்கள், தரவு மற்றும் மென்பொருள் திருடப்படுவது குறித்து CERT அதிக புகார்களைப் பெறுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.