லியோவில் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு! லியோ 2 இல் சம்பவம் உறுதி

0
137

நடிகர் விஜய்யின் லியோவில் நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டடுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் ஒக்டோபர் 19ம் திகதி வெளியாகி வசூலை அள்ளி வருகிறது.

இப்படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தும், ஹரோல் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் அர்ஜுனும், லியோ தாஸ் கதாபாத்திரத்தில் விஜய்யும் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு வாரமான போதும், இந்த படம் குறித்த செய்திகள் இணையத்தினை ஆக்கிரமித்துள்ளன.

லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான மாஸ்டர், கைதி, விக்ரம் படத்தைப் போல இந்த படம் இல்லை என்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை லோகேஷ் கெடுத்துவிட்டார் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மன்சூர் அலி கானின் நீக்கப்பட்ட செய்யப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பர்ஸ்பெக்டிவ் இருந்திருக்கும். இது என்னோட பர்ஸ்பெக்டிவ் என மன்சூர் அலி கான் லியோ தாஸ் கதையை சொல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த காட்சிகள் வெளியான நிலையில், லியோ 2 படத்தை பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.