5 தலைமுறையாக நடித்து நடிப்பரசியாய் ஆட்சி செய்த ஆச்சி மனோரமாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆச்சி மானோரமா
இந்திய சினிமாவில் பழம் பெரும் நடிகையாக ஜொலித்தவர் தான் மனோரமா. இவரையும் இவரின் நடிப்பையும் ரசித்தவர்களால் ஆச்சி எனவும் அழைக்கப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த ஆச்சி மனோரமாவின் உண்மையான பெயர் கோபி சாந்தா. சிறு வயதில் இருந்து நாடகத்துறையில் அதிக நாட்டம் கொண்ட இவருக்கு பின்னாளில் மனோரமா என்ற பெயர் சூட்டப்பட்டது.
100இற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து பிரபலமான இவர் முதன்முதலாக சிங்கள மொழித் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன் பின் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாக மாறினார். இவர் நடிப்புத் திறமைக்கு தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் போன்ற பட்டங்களும் கிடைத்தது. அதுமட்டுமல்லாது கின்னஸ் புத்தகத்தில் கூட ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார்.
வாழ்க்கையில் துன்பம், இன்பம், ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் என்பவற்றை பார்த்து சலித்து போனவர் மனோரமா.
குடும்பம்
நாடகக்குழுவில் நடித்துக் கொண்டிருந்த போது அக்குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார்.
அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.
மரணம்
நடிப்பின் அரசியாக இருந்த மனோரமா 2015ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு இன்று வரைக்கும் நிரப்ப முடியாத வெற்றிடமாக உள்ளது.
இந்நிலையில், இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.