கட்டாயப்படுத்தி காதல் மன்னனில் நடிக்க வைத்தார்கள்; நடிகை மானு

0
291

அஜித்தின் காதல் மன்னன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மானு. அவர் அந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டர்.

பள்ளி படிக்கும் காலத்திலேயே காதல் மன்னன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும், தன்னை கட்டாயப்படுத்தி தான் இயக்குனர் சரண் நடிக்க வைத்தார் என்றும் மானு தற்போது தெரிவித்து இருக்கிறார்.

‘விவேக் மற்றும் சரண் இருவரும் கட்டாயப்படுத்தி தான் நடிக்கவைத்தனர். படிப்பு முக்கியம் என எனக்கு தோன்றியதால் நான் அதில் மட்டும் அதன் பிறகு கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன்’ என மானு கூறினார்.

நான் முதலமைச்சரின் பேத்தி.. கட்டாயப்படுத்தி காதல் மன்னன்-ல் நடிக்க வெச்சாங்க: நடிகை மானு | Kaadhal Mannan Maanu Grand Daughter Of Cm

முதலமைச்சர் பேத்தி

‘எனது குடும்பம் சினிமா பின்னணி கொண்டதில்லை, எல்லோரும் டாக்டர்கள் தான். என் தாத்தா அசாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் Gopinath Bordoloi. நான் படிக்க தான் சென்னைக்கு வந்தேன்.’

‘பள்ளி படிக்கும்போதே கட்டாயப்படுத்தி காதல் மன்னன் படத்தில் நடிக்க வைத்தனர். அந்த படத்திற்கு பிறகு முழுவதும் படிப்பில் கவனம் செலுத்தினேன். என் கணவரும் தற்போது டாக்டராக தான் இருக்கிறார்’ என என மானு கூறி இருக்கிறார்.  

நான் முதலமைச்சரின் பேத்தி.. கட்டாயப்படுத்தி காதல் மன்னன்-ல் நடிக்க வெச்சாங்க: நடிகை மானு | Kaadhal Mannan Maanu Grand Daughter Of Cm