லியோ ட்ரைலரில் பெண்களை இழிவுப்படுத்தும் கெட்ட வார்த்தை பேசிய விஜய்! வலுக்கும் எதிர்ப்பு

0
190

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘லியோ’ இதன் ட்ரைலர் மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று வெளியானது.

ட்ரெய்லரின் ஒரு இடத்தில் விஜய், மிக மோசமான தகாத வார்த்தையை பயன்படுத்தி இருப்பதை இப்பொழுதே பலரும் சுட்டிக்காட்ட தொடங்கியுள்ளனர்.

விஜய் போன்ற குடும்ப ரசிகர்கள் அதிகம் கொண்ட மாஸ் ஹீரோ இந்த வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர். இன்னொரு பக்கம் கண்டனமும் விஜய்க்கு வலுக்கிறது.

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை கூறுகையில், விஜய் அவர்கள் சினிமா நடிக்கட்டும், பணம் சம்பாதிக்கட்டும் என்னவோ பண்ணட்டும் அதில் எந்த பிரச்சினையும் யாருக்கும் இல்லை.

Vijay

அரசியலுக்கு வரப்போகிறேன் என்று தன்னுடைய ரசிகர்களை வைத்து டாக்டர் திரு.பி.ஆர். அம்பேத்கர் போன்றவர்களை முன்னிருத்தும் நீங்கள் லியோ படத்தின் முன்னோட்டத்தில் பெண்களை தவறான வார்த்தையில் சித்தரிக்கும் வார்த்தையை கூறி பெண்களை இழிவு செய்வது நியாயமா?

இதுதான் நீங்கள் கற்றுக்கொண்ட ஒழுக்கமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியாவின் ட்விட்டர் பதிவில், விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது (1.46 நிமிடத்தில்) அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா?

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து கொள்கிறேன். லோகேஷ் கனகராஜ் தகுதியில்லாத இயக்குனர். திரைப்படத் துறை முன்வந்து இதனை எதிர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.