ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் நவம்பர் மாதம் அறிவிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.
ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறையும் புட்டின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிகண்டால் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) குறைந்தது 2030ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகிப்பார்.
அதேவேளை 1999ஆம் ஆண்டின் இறுதிநாளில் புடின் அதிபர் பொறுப்பை ஏற்றார். அதேவேளை புட்டினுக்கு முன்னர் போரிஸ் யெல்ட்சின் (Boris Yeltsin) ரஷ்ய அதிபராகப் பொறுப்பு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.