மானிடோபாவில் பழங்குடியினத்தவர் முதல்வராக தெரிவு..

0
78

மானிட்டோபாவில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் என்.டி.பி கட்சி வெற்றியீட்டியுள்ளது.

இது ஓர் வரலாற்று வெற்றியாக கருதப்படுகின்றது.

தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் மானிடோபாவில் கான்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைத்திருந்தது.

மானிட்டோபாவில் முதல் தடவையாக பழங்குடி இனத்தவர் ஒருவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார வசதிகளை மேம்படுத்தல் மலிவு விலை வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளின் அடிப்படையில் என்டிபி கட்சி பிரச்சாரத்தை முன்னெடுத்து இருந்தது.

மானிடோபாவின் மாகாண முதல்வராக வாப் நியூ தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.