தோசைக்கு சட்னி இல்லை.. ஆத்திரத்தில் ஊழியரின் மூக்கை கடித்து குதறிய இளைஞர்!

0
88

தோசைக்கு சட்னி கொடுக்காததால் உணவக ஊழியரின் மூக்கை இளைஞர் ஒருவர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உணவு கேட்டு சண்டை

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள புளியன்மலையில் உள்ள ‘தட்டுகடை’ எனப்படும் உணவகத்திற்கு கடையை அடைக்கும் நேரத்தில் சுஜீஷ் என்ற இளைஞர் உணவு கேட்டு வந்துள்ளார்.

ஆனால் அங்கு உணவு இல்லாததால், உணவக ஊழியருக்கு வைத்திருந்த ஒரு தோசையை கொடுத்துள்ளனர். அப்போது தோசைக்கு சட்னி கேட்டுள்ளார் சுஜீஷ். ஆனால் அங்கு சட்னி இல்லாததால் ஆத்திரமடைந்த சுஜீஷ் உணவகத்தை அடித்து நொறுக்கியுள்ளார்.

வழக்கு பதிவு

தடுக்க வந்த உணவாக ஊழியரான சிவச்சந்திரன் என்பவருடன் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அது தகராறாக மாற சுஜீஷ், சிவசந்திரனை தாக்கி அவரின் மூக்கை கடித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த சிவச்சந்திரனை மற்ற ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வண்டன்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.