4 வருடத்தில் விவாகரத்து 2ம் திருமணத்திற்கு தயாரான நாதஸ்வரம் சீரியல் நடிகை: குவியும் வாழ்த்துக்கள்

0
36

நாதஸ்வரம், மகராசி போன்ற சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஸ்ரீதிகா தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டதாகவும், தான் விரைவில் மகராசி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் ஆரியனை திருமணம் செய்ய போவதாகவும் திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாலது,

இந்த முக்கியமான செய்தியை எங்கள் சமூக ஊடக குடும்பத்திற்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நான் ஸ்ரீதிகா மற்றும் ஆரியன் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு எங்களுடைய முந்தைய திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட்டோம்.

எங்கள் இருவருக்கும் ஏற்கனவே வேறொரு திருமண வாழ்க்கை இருந்தாலும் அந்த வாழ்க்கையில் இருந்து நாங்கள் பிரிந்த பிறகு அதைப் பற்றி குறை கூற விரும்பவில்லை. அந்த வாழ்க்கை பற்றி எதிர்மறையை பரப்பவோ நாங்கள் விரும்பவில்லை. எங்களின் தூய நட்பும், அன்பும் எங்களின் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு அளித்திருக்கிறது.

உங்கள் அனைவரின் ஆதரவும் எங்கள் பெற்றோரின் ஆசிர்வாதத்துடனும் நாங்கள் பதிவு திருமணத்தை செய்ய உள்ளோம். எப்போதும் போல நாங்கள் எடுத்த இந்த முடிவுக்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் பொழியுமாறு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடக நேர்காணல்களில் விரைவில் பகிர்ந்து கொள்வோம்.

இன்ஸ்டாகிராம் கோளாறுகளால் எங்கள் இருவருடைய இன்ஸ்டாகிராம் ஐடியை மாற்ற முடியாமல் போனது. என்னுடைய கணவர் பெயரோடு என்னுடைய Instagram ஐடி ஏற்கனவே நான் மாற்றி விட்டேன்.

அதை இப்போது மீண்டும் மாற்ற முயற்சிக்கிறேன். ஆனால் அது சில தொழில்நுட்ப காரணங்களால் முடியாமல் இருக்கிறது. அது விரைவில் மாற்றப்பட்டு விடும் என்று உறுதி அளிக்கிறேன்.

நீங்கள் எல்லோரும் எங்களின் புது வாழ்க்கைக்கு ஆதரவு தர வேண்டும் என்று அந்தப் பதிவை நடிகை ஸ்ரீதிகா மற்றும் ஆரியன் இருவரும் பகிர்ந்து இருக்கின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.