நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகை திரிஷா ..

0
374

நயன்தாரா 

நடிகை நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் இறைவன் திரைப்படம் வெளிவந்தது. ஆனால், இப்படத்தில் இவருக்கு பெரிதும் ஸ்கோப் இல்லை என பல விமர்சனங்கள் வெளிவந்தன.

அடுத்ததாக மண்ணாங்கட்டி, நயன்தாரா 75, டெஸ்ட் என பல படங்களை நடிகை நயன்தாரா கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், ஒரு படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா தற்போது ரூ. 10 கோடி முதல் ரூ. 11 கோடி வரை சம்பளமாக வாங்கி வருவதாக தகவல் கூறப்படுகிறது. இதன்மூலம் இவர் தான் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நடிகை.

நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகை இவர் தான்.. யார் தெரியுமா | Trisha Beats Nayanthara In Salary

நயன்தாராவை மிஞ்சிய திரிஷா 

ஆனால், தற்போது நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் இடத்தில் திரிஷா இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. லியோ, விடாமுயற்சி என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வரும் திரிஷா அடுத்ததாக கமல் – மணி ரத்னம் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகிறது.

நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகை இவர் தான்.. யார் தெரியுமா | Trisha Beats Nayanthara In Salary

இப்படத்தில் நடிக்க நடிகை திரிஷாவிற்கு ரூ. 12 கோடி சம்பளம் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகை திரிஷா தான் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது