நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா படிக்கும் பாடசாலையில் பள்ளி கட்டணம் தொடர்பிலான தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.
ஐஸ்வர்யா ராய்
உலக அழகியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் அப்போதும் இப்போதும் தமிழ் சினிமாவில் கொண்டாடும் நடிகையாக இருப்பவர். தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
அதற்கு பிறகு சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
மகளின் ஸ்கூல் பீஸ்
நடிகை ஐஸ்வர்யா ராய் 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.
ஆரத்யாவிற்கு தற்போது மும்பையில் உள்ள திருபானி அம்பானி சர்வதேச பள்ளியில் 8ஆம் வகுப்பில் படித்து வருகிறார்.
எல்.கே.ஜியில் இருந்து ஏழாம் வகுப்பு வரை அந்தப் பள்ளியில் தான் படித்திருக்கிறார் அதற்கான வகுப்பு கட்டணம் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ஆகும். தற்போது எட்டாம் தரத்திலிருந்து பத்தாம் தரம் வரை படிப்பதற்கு நான்கு இலட்சத்து 48ஆயிரம் ரூபா வரைக்கும் கட்ட வேண்டுமாம்.