பணிபுரியும் பெண்களை தாக்கும் நோய்; வைத்தியர் விடுத்த எச்சரிக்கை

0
232

இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

45 முதல் 65 வயது வரையிலான பெண்கள் ஆபத்தில் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணிபுரியும் பெண்கள்

அத்துடன் பணிபுரியும் பெண்கள் மிகக் குறைந்த மட்டத்திலேயே சோதனைக்கு செல்வதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் இந்த நிலைமை மோசமாகியுள்ளதாகவும் பதிவாகியுள்ள புற்றுநோயாளிகளில் 26 பேர் மார்பகப் புற்றுநோயாளிகளாக இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.