பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை !

0
141

பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்கள் அதனை அண்மித்த கற்பாறைகள் அமைந்திருக்கும் இடத்துக்கு சென்று நீராடுவதனையோ, காலை நனைப்பதனையோ தவிர்ந்து கொள்வது சிறந்தது என பர்ஹான் மௌலானா என்பவர் எச்சரிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாறைகளுக்கு அருகில் நீரினுள் சில விஷ பூச்சிவகை மனிதர்ளுக்கு தீண்டுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அந்த விஷ பூச்சிவகை மனிதர்களை தீண்டியதும் அதனது வலியை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் போகின்றது.

நேற்று எனது நண்பன் ஒருவருக்கு இந்த விஷ பூச்சி தீண்டியதில் அவர் பட்ட அவதியினை கண்களால் கண்டதினால்தான் இந்தப்பதிவினை போட்டு அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்! | Pasikudah Beach Poisonous Insect Warning To People

பெரிய ஒருவரினாலே அந்த வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை சிறுவர்களுக்கு அவ்வாறு ஏற்பட்டால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. அதனால் கட்டாயம் அவதானமாக இருக்க வேண்டுமென அவரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனது நண்பன் வலியால் துடிக்க உடனடியாக அருகாமையில் உள்ள வாழைச்சேனை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அவரை அனுமதித்தோம். அதன் பின்னர் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டது.

வலியை குறைக்க ஊசி போட்டும் வலி குறையவில்லை. தீண்டிய இடம் நீல நிறமாக மாறியது. காலும் வீங்க அரம்பித்தது. வலியும் குறையவில்லை. மீண்டும் வலியை குறைக்க சப்போசிட்டரி வைக்கப்பட்டது.

அதில் இருந்து கிட்டத்தட்ட 1 மணித்தியாலத்திற்கு பின்னர் தான் லேசாக வலி குறைய ஆரம்பித்தது. வைத்தியசாலை கொண்டு சென்ற பின்தான் தெரிந்து கொண்டோம் இந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் 5 பேர் இந்த விச பூச்சியின் தீண்டுதலுக்கு உள்ளாகி வைத்தியசலைக்கு கொண்டு வந்து அனுமதிக்கப்பட்டனர் என்பது.

இந்நிலையில், தயவு செய்து யானைக்கல் மலை இருக்கும் பக்கம் செல்பவர்கள் கடலினுள் இறங்குவதனை தவிர்ந்து கொள்வது சிறந்தது.