தமிழ்மொழியை புறக்கணித்த வவுனியா பல்கலைக்கழகம்; சார்ள்ஸ் ஆதங்கம்

0
129

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19.09.2023) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை வவுனியா மற்றும் வன்னி வாழ் மக்களுக்கு மனவேதனையான விடயமாக காணப்பட்டது.

வளங்கள் பற்றாக்குறை

தமிழ்மொழியை புறக்கணித்த வவுனியா பல்கலைக்கழகம்: சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆதங்கம் | Neglect Of Tamil Language In Vavuniya University

சிங்கள மொழியிலும், ஆங்கில மொழியிலும் மாத்திரமே வரவேற்பு பலகை இடம் பெற்றிருந்தது. இது தமிழ் மக்கள் மத்தியில் மன வேதனையாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருந்தது.

மேலும் வவுனியா பல்கலைக்கழகத்தில் வள பற்றாக்குறை அதிகமாக காணப்படுகின்றது. அதனை தீர்த்து வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இதனை உயர்கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.” எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த உயர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

“வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை தமிழ்மொழி புறக்கணிப்பு தொடர்பில் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இவ்வாறு நடைபெறாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.