அப்பாவை நம்பவேண்டாம்னு சொன்னாங்க.. நான் தான் கேட்கல – நடிகை வனிதா உருக்கம்!

0
54

நடிகை வனிதா விஜயகுமார் தனது தாய் குறித்து மனம் உருகி பேசியுள்ளார். 

வனிதா

தமிழ் சினிமாவில் பிரபலங்களான மஞ்சுளா – விஜயகுமார் தம்பதியின் மூத்த மகள், வனிதா. இவர் 1990-ம் ஆண்டு தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்கள் மட்டுமே நடித்தார்.

பின்னர் தன்னுடன் நாடகத்தில் நடித்த, நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பிறகு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு இரண்டு திருமணம் செய்தார் அதுவும் இவருக்கு சரியாக அமையவில்லை. தற்பொழுது தனது 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

நடிகை பேட்டி

இந்நிலையில், நடிகை வனிதாவை தவிர அவரது குடும்பத்தினர் அனைவரும் இனைந்து ஒற்றுமையாக வாழ்ந்துனு வருகின்றனர், வனிதாவின் தாய் 2013 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவர் மரணப்படுக்கையில் கூறியது குறித்து பேசியுள்ளார், அதில், “குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று அம்மா விரும்பினார். உங்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு. அவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள்.

actress-vanitha-opens-about-her-mom

நான் இருக்கும் போது என்னிடம் கேள் என்றார் அம்மா. ஆனால் நான் என் அம்மாவிடம் அவரை விட பெரிய செல்வம் என்னிடம் இல்லை என சொன்னேன். அன்று அம்மாவின் விருப்பத்திற்கு அப்பா தலையசைத்தார்.

ஆனால் தாயின் மரணத்திற்கு பிறகு நான் கைவிடப்பட்டேன். என் அப்பா குடும்பத்தை நம்ப வேண்டாம் என சொன்னார்கள். நான் தான் நம்பினேன்” என்று கூறியுள்ளார்.