பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பல ஹிட் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி நடிகராகவும் அசத்தி வருகிறார்.
இவர் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார், இவரது மகள் மீரா, சென்னையில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்றிரவு வழக்கம் போல் தன்னுடைய அறையில் உறங்க சென்றுள்ளார் மீரா, இன்று அதிகாலை 3 மணியளவில் விஜய் ஆண்டனி மகள் அறைக்கு சென்ற போது தூக்கில் தொங்கியுள்ளார்.
உடனடியாக பதறிப்போய் மகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதும், பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மீரா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதுவே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
எனினும் வழக்குபதிவு செய்துள்ள தேனாம்பேட்டை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர் மற்றும் பள்ளி நண்பர்களிடம் பொலிசார் விசாரணை நடத்த உள்ளனர்.
காவேரி மருத்துவமனையில் மீராவின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், உடற்கூராய்வு முடிந்து காலை 10 மணியளவில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் விஜய் ஆண்டனியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.