தைவான் எல்லையில் பறந்த 103 சீன போர் விமானங்கள்!

0
33

இன்று ஒரே நாளில் சீனாவுக்கு சொந்தமான 103 போர் விமானங்கள் தைவான் எல்லையில் பறந்துள்ளன.

இவற்றில் 40 விமானங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையை தாண்டியுள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தைவான் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை

அதேபோல் 9 போர் கப்பல்களும் தைவானின் கடற்பகுதிக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையில் போர்ப்பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு தைவான் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.