உலக கிண்ணத்தை கைப்பற்றும் அணி தொடர்பில் குமார் சங்கக்கார கருத்து

0
268

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை இங்கிலாந்து அல்லது இந்தியா கைப்பற்றும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளராக தற்போது கடமையாற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி போட்டிக்கு பின்னரான கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘தற்போது நடைபெற்று வரும் ஆசியகிண்ண போட்டியில் இலங்கை அணியின் விளையாடும் விதத்தை பார்க்கும் போது உலகக் கிண்ணத்தில் தகுதி சுற்றுக்கு செல்வது இலங்கை அணிக்கு சவாலானதாக இருக்கும்.

இலங்கை அணி அண்மைக்காலமாக கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. எனவே உலகக்கிண்ண தகுதி போட்டி இலங்கை அணிக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும்’ என தெவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் இலங்கை வீரர்கள் உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக சிறப்பான முறையில் தமது ஆரம்பத் துடுப்பாட்டத்தினை அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் போட்டிகளில் முன்னேற இலங்கை அணியானது எப்போதும் போட்டித் தன்மையுடன் காணப்பட வேண்டும் எனவும் குமார் சங்கக்கார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.