அமெரிக்காவை சேர்ந்த எக்ஸ்.எல். புல்லி வகை நாய்கள், இங்கிலாந்து சமூக மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினரால் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், டுவிட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட காணொளி ஒன்றில்,
மக்களை பாதுகாக்கும் நடவடிக்கை
”அமெரிக்காவின் எக்ஸ்.எல். புல்லி இன நாய்கள் நம்முடைய சமூகத்திற்கு ஆபத்து ஏற்படுத்த கூடியவை என தெளிவாக தெரிகிறது. இதனை வரையறை செய்து, தடை செய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளும்படி நான் உத்தரவிட்டுள்ளேன்.

அதனால் இந்த தாக்குதல்களுக்கு முறையான தீர்வொன்றை மேற்கொண்டு மக்களை பாதுகாப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இந்த விlடயம் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் தொடர்புடையவை அல்ல என்பது தெளிவாக தெரிகிறது. இது அவை நடந்து கொள்ளும் முறையை சார்ந்தது. அதனை இப்படியே விடமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த இன நாய்கள் மிக ஆபத்து நிறைந்தவை. ஆபத்து விளைவிக்கும் நாய்கள் சட்டத்தின் கீழ் இந்த இன நாய்களை அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.
It’s clear the American XL Bully dog is a danger to our communities.
— Rishi Sunak (@RishiSunak) September 15, 2023
I’ve ordered urgent work to define and ban this breed so we can end these violent attacks and keep people safe. pic.twitter.com/Qlxwme2UPQ