நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், நெட்வெர்க்கின் வேகமும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தற்போது பெரும்பாலான நபர்கள் 4ஜி இணைப்புகளை பயன்படுத்திவரும் நிலையில் 5ஜி இணைப்புகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஆனால் இந்த 5ஜி இணைப்புகள் சில குறிப்பிட்ட மொபைல்களில் மட்டுமே செயல்படுத்த முடியும் என்ற கட்டாயம் இருப்பதால் தற்போது பலரும் தங்களது பழைய மொபைலை மாற்றி வருகின்றனர். அந்த வகையில் 5ஜி மொபைல் அதிரடி ஆஃபரில் காணப்படும் சாம்சங் மொபைல் குறித்து தெரிந்து கொள்வோம்.
சாம்சங் போன், 6.5 இன்ச் (1080×2340 Pixel), FHD+, Super AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. இவை Infinity-U மாடலாகும். Corning Gorilla Glass 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் Android 13 OS மற்றும் One UI 5.1 கொண்ட ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1280 5என்எம் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் Mali G68 கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.
மேலும், 1 டிபி வரை மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இரட்டை சிம் கார்டு சிலாட்டுட்டுன், எஸ்டி கார்டு சிலாட் வருகிறது.
மெயின் கமெரா 50 எம்பியும், 8 எம்பி அல்ட்ரா வைடு கமெராவும், 2 எம்பி மைக்ரோ கமெராவும் இருக்கின்றது. இதில் மெயின் கமெரா OIS கேமராவாகும். மற்ற இரண்டு கமெராவிலும் பனோரமா மற்றும் எச்டிஆர் சப்போர்ட் வருகிறது.
13 எம்பி செல்பி கமெராவும் உள்ள நிலையில், அதோடு 4K தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ள முடியும். இந்த போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது.
Side-mounted Fingerprint Sensor கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், Type-C Audio மற்றும் Dolby Atmos சப்போர்ட் வருகிறது.
இதில் கனெக்விட்டி என்று பார்த்தால், Bluetooth 5.2, Dual-Frequency GPS, Wi-Fi 6, Dual 4G VoLTE மற்றும் 5ஜி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மிட்நைட் ப்ளூ, ப்ரிஸம் சில்வர் மற்றும் Waterfall Blue ஆகிய நிறங்களில் வருகின்றது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,999ஆக உள்ள நிலையில் அமேசன் ஆஃபரில் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி 1500 உடனடி தள்ளுபடியும், ரூ.1250 இஎம்ஐ ஆப்சன்களுக்கு வழங்கப்படுகிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.20,999ஆக உள்ள நிலையில் இதே போன்று அமேசன் ஆஃபரை பயன்படுத்திவெறும் ரூ.16,249க்கு வாங்கிக்கொள்ள முடியும்.