வவுனியாவில் 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவன் ஒருவர் பொலிஸாரால் இன்றைய தினம் (28-08-2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாடசாலை முடிவடைந்து குறித்த சிறுவன் மேலதிக வகுப்புக்காக வவுனியா, வெளிக்குளம் பகுதிக்கு சென்ற போது அப் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து நேற்று (27-08-2023) மாலை 15 வயது சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பாடசாலை சிறுவன் துஷ்பிரயோகம்
இதையடுத்து, 8 வயது சிறுவன் வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த சம்பவத்தை தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த சிறுவன் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வைத்தியசாலை பொலஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து 15 வயது சிறுவன் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.