பிரித்தானிய அருங்காட்சியகத்தில் திருட்டு: இயக்குனர் பதவி விலகல்!

0
229

பிரித்தானிய அருங்காட்சியக இயக்குனர் ஹார்ட்விக் பிஷ்ஷர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். லண்டனில் உலகப்புகழ் பெற்ற பிரித்தானிய அருங்காட்சியகம் உள்ளது.

இங்கு பழங்கால நகைகள், வைர கற்கள், கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு விலைமதிப்பு மிக்க பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற திருட்டு: ராஜினாமா செய்த இயக்குனர்! | Theft At The British Museum Resigned Director

அவ்வப்போது இங்கு நடைபெறும் கண்காட்சியில் இவற்றை பார்வையிட ஏராளமானோர் வருவதுண்டு. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த கண்காட்சி நடைபெறவில்லை.

இவ்வாறான நிலையில், பிரித்தானிய அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கலைப்பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பொருட்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற திருட்டு: ராஜினாமா செய்த இயக்குனர்! | Theft At The British Museum Resigned Director

இது தொடர்பாக கடந்த வாரம் அருங்காட்சியக ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் திருட்டை தடுக்க தவறியதற்காக பிரித்தானிய அருங்காட்சியக இயக்குனர் ஹார்ட்விக் பிஷ்ஷர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற திருட்டு: ராஜினாமா செய்த இயக்குனர்! | Theft At The British Museum Resigned Director