பொது மக்களுக்கு அறிவுறுத்தல்..

0
181

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் இந்த நோய்களுக்கு வழிவகுக்கும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் | Instructions To The General Public

குறைந்தளவு நீர் உள்ள இடங்களில் குளிப்பதன் மூலம் தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக உபுல் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.

குடிநீர் விற்பனை செய்யும் இடங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிடுகிறது.

ஏனைய முறைகளில் கிடைக்கும் தண்ணீரை குடித்தால், காய்ச்சிய தண்ணீரையே பயன்படுத்த வேண்டும் என்றும் சங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.