பெற்றோரை தவிர எதையும் இந்தியாவில் நான் மிஸ் செய்யவில்லை! கனடாவில் வசிக்கும் இந்திய பெண்

0
234

கனடாவில் மூன்று வருடங்களாக வசித்து வரும் இந்திய இளம் பெண் ஒருவர் தன்னுடைய பெற்றோரை தவிர இந்தியாவில் உள்ள வேறு எதையும் தான் மிஸ் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

உச்சரிப்புக்காக கிண்டல் செய்யப்படும் இந்திய பெண்

ட்வீட்டரில் சமீபத்தில் வெளியாகி உள்ள வீடியோவில் பேசியுள்ள இந்திய மாணவி ஒருவர், அவருடைய உச்சரிப்புக்காக இணையவாசிகளால் கிண்டல் செய்யப்பட்டு வருகிறார்.

அதில், “தான் இந்தியாவை சேர்ந்தவள்” என்றும், “கனடாவில் மூன்று வருடங்களாக வசித்து வருகிறேன், எனக்கு சுதந்திரமாக இருக்க வேண்டும், எனக்கு தெரிந்து சுதந்திரமாக இருக்க கனடா சிறந்த இடம்” என தெரிவித்துள்ளார்.

அப்போது 3 வருடங்களில் கனடாவில் உங்களுக்கு பிடித்தது எது என்று நெறியாளர் கேள்வி கேட்ட போது, “நான் ஒட்டாவா இருக்கிறேன், சொல்லப்போனால் டொராண்டோவை சுற்றிப் பார்க்கவே வந்தேன், டொராண்டோ மிகச் சிறந்ததாக உணர்கிறேன், இந்த இடம் இந்தியா போன்று உள்ளது, நிறைய இந்தியர்கள் இங்கு உள்ளனர்” என தெரிவித்தார்.

இதையடுத்து இந்தியாவில் நீங்கள் எதை மிஸ் செய்கிறீர்கள் என்று நெறியாளர் கேட்டதற்கு, என்னுடைய பெற்றோரை தவிர இந்தியாவில் உள்ள வேறு எதையும் நான் மிஸ் செய்யவில்லை என அந்த பெண் பதிலளித்தார்.

இந்நிலையில் இந்த வீடியோவை இணைத்து பலரும் அந்த இளம்பெண்ணின் பேச்சு உச்சரிப்பை இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.

அதில் ஒருவர், என்னுடைய மாமாவும், அத்தையும் 20 வருடங்களாக கனடாவில் வசித்து வருகின்றனர், இன்னும் அவர்களிடம் இதுபோன்ற ஒரு அவுன்ஸ் உச்சரிப்பு கூட இல்லை என தெரிவித்துள்ளார்.

இதை தவிர எதையும் இந்தியாவில் நான் மிஸ் செய்யவில்லை! கனடாவில் வசிக்கும் இந்திய பெண் | Woman Living Canada Miss Only One Thing From India

மற்றொருவர், கனடாவிற்கு குடியேறி மூன்று வருடங்களில் உங்கள் உச்சரிப்பு உங்களின் மனப் பாதுகாப்பின் அளவைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

வைரலான இந்திய மாணவி

இது போன்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனடாவில் குடியேறிய இந்திய மாணவி ஒருவர், இந்தியாவை விட்டு வெளியேறுவதே என்னுடைய கனவு என்று தெரிவித்து இருந்தார்.

அது மிகப்பெரிய சர்ச்சை ஆகியிருந்த நிலையில், ட்ரூகாலர் நிறுவனத்தின் நிர்வாக செயல் அதிகாரி ஆலன் மாமெடி, அந்த பெண்ணுக்கு ஆறுதல் வழங்கியிருந்தார்.