1958 இல் தயாரிக்கப்பட்ட விமானங்கள் இன்னும் பயிற்சிக்கு பயன்படுத்தப்படுவது ஏன்?

0
159

1958 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விமானங்கள் இன்னும் பயிற்சிக்காக பயன்படுத்தப்படுவது ஏன் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் PT-6 ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரவித்தார்.

மேலும் இது தொடர்பில் பேசிய அவர்,

பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் PT-6 ரக விமானங்கள் 1958இல் தயாரிக்கப்பட்டதாகவும் இயந்திரங்கள் 1961இல் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

போர் விமானங்களின் பழுதுபார்க்கும் பணிக்காக அரசாங்கம் 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. ஆனாலும் PT-6 விமானத்தின் விலை 0.75 அமெரிக்க டொலர்கள் மட்டுமே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த பழைய கிரிவ்ப் விமானங்களை பயிற்சி நோக்கங்களுக்காக பயன்படுத்துவது நியாயமற்றது மற்றும் வருந்தத்தக்கது என்றும் இந்த நியாயமற்ற மற்றும் வருந்தத்தக்க சம்பவங்களுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு பழுதுடைய விமானங்களை பயிற்சி நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு பதிலாக அருங்காட்சியகங்களில் வைக்க வேண்டும் என்றும் அவர் உறுப்பினர் குறிப்பிட்டார்.