பாரிய நஷ்டம்; நாட்டை விட்டு தப்பி ஓடிய முக்கிய அதிகாரி!

0
216

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்ட காலப்பகுதியில் எதிர்கொண்ட பாரிய நஷ்டத்திற்கு காரணமானவர் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த அதிகாரியொருவர் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டிற்கு சென்றுள்ளமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

 மனைவி ஊடாக பதவி இராஜினாமா  

வர்த்தகம் மற்றும் விநியோகத்திற்கான முன்னாள் பிரதிபொது முகாமையாளரே விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறு வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுள்ளார்.

சிரேஸ்ட அதிகாரியொருவர் விசாரணைகள் இடம்பெறும்வேளை எவ்வாறு நாட்டிலிருந்து செல்வதற்கான அனுமதியை எவ்வாறு பெற்றார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அவ்வாறான முக்கியமான பதவியில் உள்ள நபர் ஒருவர் விசாரணைகள் இடம்பெறும்வேளை பாதுகாப்பு அனுமதியை பெறாமல் இராஜினாமா செய்திருக்க முடியாது என தெரிவித்துள்ள வட்டாரங்கள் இந்த ஊழலில் ஒருவர் மாத்திரம் ஈடுபட்டிருக்க முடியாது என்றும் கூறுகின்றனர்.

எனவே இது தொடர்பில் ஊழலில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளம் காணமுழுமையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

குறிப்பிட்ட அதிகாரி எவ்வாறு தனது மனைவி மூலம் இராஜினாமா கடிதத்தை வழங்க முடியும் என்றும், அவர் மீண்டும் திருப்பி அழைக்கப்படுவாரா என்ற கேள்விகளுக்கு அமைச்சர் காஞ்சன விஜயசேகரவே பதிலளிக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.