மயிரிழையில் உயிர் தப்பிய உக்ரைன் அதிபர் – பெண் மூலமான ரஷ்யாவின் பாரிய சதிச் செயல் அம்பலம்

0
143

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவின் பாரிய படுகொலை சதி முயற்சி ஒன்றிலிருந்து நூலிழையில் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண் ஒருவரின் நடமாட்டத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து அவரை கைது செய்த உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த சதித்திட்டம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

யார் அந்தப் பெண்

பெண்ணிண் அடையாளம் தெரியாத நிலையில் அவர் உக்ரைன் அதிபர் செல்லும் இடங்கள் சந்திக்கும் நபர்களை ரஷ்யாவுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் தெற்கு மைகோலேவ் பகுதிக்கு செல்வது தொடர்பாக குறித்த பெண் தகவல் அளித்த நிலையில், ரஷ்யா அப்பகுதியில் ஒரு பாரிய வான்வழி தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மயிரிழையில் உயிர் தப்பிய உக்ரைன் அதிபர் - பெண் மூலமான ரஷ்யாவின் பாரிய சதிச் செயல் அம்பலம் | President Of Ukraine Survived By A Hairline

பத்துக்கும் மேற்பட்ட முறை படுகொலை செய்ய சதி

அதே வேளை ஒரே வாரத்தில் மூன்று படுகொலை சதி திட்டத்தில் இருந்து ஜெலென்ஸ்கி அதிர்ஷ்டவசமாக தப்பியதாக உக்ரைன் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் பத்துக்கும் மேற்பட்ட முறை படுகொலை செய்ய சதி நடந்துள்ளது.

தற்போதும், ஜெலென்ஸ்கி மீதான தாக்குதல் திட்டம் குறித்து, அறியவந்த உக்ரைன் பாதுகாப்பு சேவை அதிகாரிகள், உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட பெண்ணின் முகம் மறைக்கப்பட்ட புகைப்படங்களை உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். குறித்த பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.