IMDB சிறந்த இந்திய திரைப்படங்களின் பட்டியல்: பதான் முதலிடம்

0
276

IMDb இணையதளம் வெளியிட்டுள்ள இந்திய அளவிலான 10 திரைப்படங்களின் பட்டியலில் ‘பதான்’ முதலிடமும் ‘வாரிசு’ ஒன்பதாம் இடமும் பிடித்துள்ளன.

உலக அளவில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கான மதிப்பீடுகளை நிர்ணயிக்கும் IMDb இணையதளம் ஒவ்வொரு ஆண்டும் முதல் 10 படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் சில தினங்களுக்கு முன்பு 2023ம் ஆண்டு வெளியானதில் உலக அளவில் கவனம் ஈர்த்த திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர் பட்டியலை வெளியிட்டிருந்தது.

Most Popular Top 10 Indian Movies

Most Popular Top 10 Indian Movies

இதில், ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘பதான்’ முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ படமும் உள்ளது.

மூன்றாவது இடத்தை ‘தி கேரளா ஸ்டோரியும், ‘வாரிசு’ திரைப்படம் 9வது இடத்திலும், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’ 10வது இடத்திலும் உள்ளன.

இதேவேளை, ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி நடித்திருந்த ‘ஃபார்ஸி’ தொடர் இரண்டாம் இடம் பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

10 திரைப்படங்கள் பட்டியல்

  1. பதான்
  2. கிஸி கா பாய் கிஸி கி ஜான்
  3. தி கேரளா ஸ்டோரி
  4. து ஜூத்தி மெய்ன் மக்கார்
  5. மிஷன் மஜ்னு
  6. சோர் நிக்கல் கே பாகா
  7. ப்ளடி டாடி
  8. சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹே
  9. வாரிசு
  10. பொன்னியின் செல்வன் 2