பொதுநலவாய பளுதூக்கும் போட்டிக்கு முதல் தடவையாக வடமாகாண மாணவி தெரிவு

0
176

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து மாணவி ஒருவர் தெரிவாகியுள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக வவுனியாவிலிருந்து 40கிலோ எடை பிரிவில் 16 வயதையொட்டிய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி கோசியா திருமேனன் தெரிவாகி பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த மாணவி நேற்று முதல் 16 ஆம் திகதி வரை டெல்லியில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஞானஜீவன் ஆசிரியரின் நெறிப்படுத்தலில் போட்டிக்கு தெரிவான மாணவிக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Gallery
Gallery