‘ஸ்ரீலங்கா லகும’ புராதன மரத்தை வெட்டி அகற்றுவதற்கு ஒரு குழுவினர் முயற்சி

0
243

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணியின் போது சுற்றுசூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பாதுகாக்கப்பட்ட ‘ஸ்ரீலங்கா லகும’ என்ற புராதன மரத்தை வெட்டி அகற்றுவதற்கு ஒரு குழுவினர் முயற்சி செய்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெயங்கொட, தரல்வ பிரதேசத்தில் உள்ள இலங்கை லகுமா மரம் 100 வருடங்களுக்கும் அதிகமான பழமையானது என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக மரத்தை அந்த இடத்தில் இருந்து அகற்றி மீண்டும் வேறு இடத்தில் நடவும் திட்டமிடப்பட்டது.

எனினும், இரண்டு பேக்ஹோக்களை ஏற்றிய லொறியில் வந்த ஒரு குழுவினர் மிகக் குறுகிய காலத்தில் மரத்தை அகற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, மரத்தை அகற்றுவதற்காக சீன மற்றும் சிங்கள பிரஜைகள் குழுவொன்று வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.