அரசியல் பிழைப்புக்காக நாட்டில் மீண்டும் மோதல்களை தூண்டும் அரசு – அனுர குற்றம்

0
152

அரசாங்கம் தனது அரசியல் பிழைப்புக்காக நாட்டில் மீண்டும் இன, மத மோதல்களை தூண்ட முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த காலத்தைப் போலவே ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி அலைவரிசை இதுபோன்ற மோதலை தூண்டுவதில் முன்னிலை வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற முப்படைகள் மன்றத்தின் அனுராதபுரம் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 

இனவாத மோதல்

அரசியல் பிழைப்புக்காக நாட்டில் மீண்டும் மோதல்களை தூண்டும் அரசு - அனுரகுமார குற்றச்சாட்டு | Jvp Anurakumara Dissanayake About Government

75 வருடங்களாக நாட்டை அழித்த ஆட்சியாளர்களுக்கு எதிராக அடிமட்ட சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.

இந்த நிலையில், அனைத்து சமூகங்களினதும் ஒற்றுமையால், அச்சமடைந்த ஆட்சியாளர்கள் தற்போது மீண்டும் அவர்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என அனுரகுமார  தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆட்சியாளர்கள் மக்களை வடக்கு, தெற்கு என பிரித்துவிட்டு மீண்டும் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அவர்களை பிரிக்க முயற்சிக்கின்றனர்.

ஆட்சியாளர்களின் இத்தகைய அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சிக்கு மக்கள் பலியாகிவிடக் கூடாது என்று கூறிய அவர் இனவாத மோதல்களால் நாடு பாரிய துன்பங்களைச் ஏற்கனவே சந்தித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய நல்லிணக்கத்தின் அடிப்படையிலேயே உலகில் வளர்ந்த நாடுகள் அபிவிருத்தியை அடைந்துள்ளன என்றும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.