கனடாவில் ஆங்கிலத்தில் பேசிய சிறுமிக்கு ஏற்பட்ட சிக்கல்..

0
163

கனடாவில் ஆங்கில மொழியில் பேசிய சிறுமியொருவர் கண்டிக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் மொன்றியால் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை பஸ் ஒன்றில் பயணம் செய்த சிறுமி, ஆங்கில மொழியில் பேசும் போது, அந்த பஸ்ஸின் சாரதி அவரை கடுமையாக சாடியுள்ளார்.

12 வயதான மெடிஸன் சிச்மிட் என்ற சிறுமியே இந்த நெருக்கடியை எதிர்நோக்கியவராவார்.

இந்த சிறுமி ஓர் விசேட தேவையுடைய மாற்றுத் திறனாளி எனத் தெரிவிக்கப்படுகின்றது.

“எனது மொழியில் பேச முடியாவிட்டால் நீ என்னை மதிக்கவில்லை என அர்த்தம், இந்த நாட்டில் எல்லோரும் பிரெஞ்சு மொழியில் பேச வேண்டும். அவ்வாறு பிரெஞ்சு மொழியில் பேச முடியாவிட்டால் ஏதோ குறைபாடு காணப்படுகின்றது என்று அர்த்தம்” என குறித்த சாரதி கடும் தொனியில் திட்டியுள்ளார்.

சிறுமியை சாரதி திட்டிய சந்தர்ப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது மகள் மீது இவ்வாறு கடுமையான தொனியில் பேசியமை ஏற்புதல்ல என மெடிஸனின் தாய் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளதுடன், சாரதியும் மன்னிப்பு கோருவார் என அறிவித்துள்ளது.