கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளானதில் 200 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் கோரவிபத்துக்குள்ளான புகையிரதத்தில் பயணித்து உயிர்தப்பிய பயணியொருவர் தனது திக் திக் அனுபவத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில்,
கைகால் அற்ற உடல்கள் – தண்டவாளத்தில் இரத்தக்களறி
https://twitter.com/anubhav2das/status/1664709136758591502
ஹவ்ராவிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த கொரமன்டல் ரயிலின் ஒரு பயணி என்ற அடிப்படையில் இந்த விபத்திலிருந்து உயிர்பிழைத்தமை குறித்து நான் மிகவும் நன்றியுடையவனாக உள்ளேன்.
வரலாற்றில் மிகப்பெரிய ரயில்விபத்தாக இது இருக்கலாம் மூன்று புகையிரதங்கள் இந்த விபத்தில் தொடர்புபட்டுள்ளன கொரமண்டல்எக்ஸ்பிரஸ்- ஹெவ்ரா எஸ்எவ் மற்றுமொரு சரக்குரெயில்.
கொரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்குரயிலுடன் மோதியதாகவே ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து தடம்புரண்ட ரயில்கள் அருகில் உள்ள தண்டவாளத்தில் பயணித்துக்கொண்டிருந்த யெஸ்டவன்பூர் எக்ஸ்பிரசுடன் மோதியுள்ளன.
யெஸ்டவன்பூர் எக்ஸ்பிரசின் 3 பெட்டிகள் முற்றாக சேதமடைந்து தடம்புரண்டுள்ளன,கொரமண்டல் எக்ஸ்பிரசின் 13 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.
உயிரிழப்புகள் – நான் மிகைப்படுத்தவிரும்பவில்லை,200 முதல் 250 உயிரிழப்புகளை பார்த்தேன் – குடும்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன,கைகால் அற்ற உடல்கள் தண்டவாளத்தில் இரத்தக்களறி நான் பார்த்ததை என்னால் என்றும் மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.