யாழில் சடலம் மீட்கப்பட்ட இடத்துக்கு அருகில் மற்றுமொரு சம்பவம்..

0
92

யாழ்.பருத்தித்துறையில் இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள வீடொன்றின் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் (வயது 50) என்பவரே மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழில் சடலம் மீட்கப்பட்ட இடத்துக்கு அருகில் மற்றுமொரு சம்பவம்; குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி | Swordsmanship In Yali

வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல்

கடந்த 28ஆம் திகதி பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33) எனும் இளைஞன் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மூன்றாம் குறுக்கு தெருவில் உள்ள சுகுமார் என்பவரின் வீட்டுக்கு வெளியே அதிகாலை வேளை சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் சுகுமாரின் வீட்டினுள் , அத்துமீறி நுழைந்த மூவர் கொண்ட குழு சுகுமார் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

உயிரிழந்த இளைஞன் இரவு நேரம் எதற்காக அந்த வீட்டுக்கு அருகில் சென்றார் என்பது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடாத்தி உள்ளமை பொலிஸாருக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.