வானிலை முன்னறிவிப்பு; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

0
82
TOPSHOT - A Sri Lankan man carries a child through floodwaters in the suburb of Kaduwela in capital Colombo on May 17, 2016. Emergency workers in Sri Lanka on May 17 found the bodies of a woman and two children killed in a landslide, taking the toll from two days of heavy rain to 11, with thousands more forced to flee their homes. / AFP / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (01.06.2023) மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

யாழ். உள்ளிட்ட பல பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் | Weather Forecast For General Public

காற்று மற்றும் மின்னல்

அதேவேளை, வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படகூடும்.

இதன் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பகுதிகளில் ஏற்படும் மாற்றம்:

புத்தளத்திலிருந்து கொழும்பு – மாத்தறை மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்றானது மணிக்கு 20-30 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் பொத்துவிலிலிருந்து அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

யாழ். உள்ளிட்ட பல பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் | Weather Forecast For General Public

கடற்பரப்புகளில் அவ்வப்போது கொந்தளிப்பு

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.