யாழில் பதற்றம்; கஜேந்திரன் எம்.பி ஐ குண்டுக்கட்டாக தூக்கி சென்ற பொலிஸார்!

0
45

யாழ். வலிகாமம் – தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (23) காலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று திங்கட்கட்கிழமை (22) மதியம் 3 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

யாழில் பதட்டம்; எம்.பி ஐ குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற பொலிஸார்! | Anxiety In Yali The Police Who Took The Mp Away

இந்த நிலையில் புதிய நீதிமன்ற உத்தரவொன்றை காண்பித்து போராட்டக்காரர்களை விலகும் படி பொலிஸார் கோரியிருந்தனர். எனினும் அதனை மறுத்த போராட்டக்காரர்கள் இன்று (23) காலை மீண்டும் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதனை தொடர்ந்தே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை பொலிஸார் வலுக்கடாயமாக தூக்கி சென்றதனால் அங்கு சற்று பதட்டமான நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  

யாழில் பதட்டம்; எம்.பி ஐ குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற பொலிஸார்! | Anxiety In Yali The Police Who Took The Mp Away