அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழர்; ட்ரம்ப் வாழ்த்துகள்!

0
309

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி களமிறங்கியுள்ளார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இதற்காக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலுக்கு அவர் விண்ணப்பித்துள்ளார். இந்த வேட்பாளர் தேர்தலுக்கு அக்கட்சியைச் சேர்ந்த முக்கியத்தலைவர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

 டிரம்ப் வாழ்த்து

அவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 37 வயதுடைய தொழிலதிபரான விவேக் ராமசாமியும் ஒருவர் ஆவார். அதேவேளை மற்றொரு இந்திய வம்சாவளியினரான நிக்கி ஹாலேயும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விவேக் ராமசாமியை தனது சமூக வலைதள பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழர்; டிரம்ப் வாழ்த்து! | Tamil In Us Presidential Election Vivek Ramaswamy

“விவேக் ராமசாமி எனக்குப் பிடித்தமானவர். அவரைப் பற்றி கூறுவதற்கு நல்ல விடயங்களே உள்ளன. அண்மைய ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் அவர் சிறப்பாகச் செயல்பட்டார். ‘ஜனாதிபதி ட்ரம்ப்’ குறித்தும் ட்ரம்ப் நிர்வாகம் குறித்தும் அவர் நல்ல விடயங்களை மட்டும் கூறக்கூடியவர்.

அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார்” என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.