நிறைவேறாத ஆசை; விமான வடிவில் வீடு கட்டிய தொழிலாளி!

0
428

விமானத்தில் பறக்க முடியாத ஆசையை நிறைவேற்றும் விதமாக கம்போடியாவில் உள்ள கட்டிட தொழிலாளி ஒருவர் விமான வடிவில் வீடு கட்டி அதில் குடியேற உள்ளார்.

தாம் கட்டுமான பணியில் 30 ஆண்டுகள் உழைத்து சேமித்த பணத்தில் தொழிலாளி க்ராச் போவ், இந்த விமான இல்லத்தை உருவாக்கி உள்ளார்.

விமான வீட்டில் வசிப்பதில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் தாம் உள்ளே நடக்கும்போது அது உண்மையான விமானம் போல் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை தாம் இதற்கு முன் விமானத்தில் சென்றதில்லை என்றும் ஆனால் விமானங்கள் அங்குமிங்கும் பறந்து சென்று தரையிறங்குவதைப் பார்த்ததும் வீட்டைக் கட்டும் எண்ணம் தோன்றியதாக க்ராச் போவ் தெரிவித்துள்ளார்.