குடிபோதையில் இளவரசர் ஹரி செய்த காரியம்! அம்பலமான தகவல்

0
141

பிரித்தானிய இளவரசர் ஹரி 2012ஆம் ஆண்டு மதுபோதையில் சென்ட்ரி பெட்டிக்குள் விழுந்த சம்பவத்தை ராணுவ வீரர் நினைவு கூர்ந்துள்ளார்.

காவலர் பிரிவின் இல்லமான வெலிங்டன் பராக்ஸில் உள்ள இரவு உணவு மேசையில் நடந்த சம்பவங்கள் குறித்து ராணுவ வீரர் விவரித்தார். அப்போது ராணுவத்தில் இருந்த ஹரி, தன் கடமையில் இருந்து விலகி தனது நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மதுபோதையில் இளவரசர் ஹரி செய்த காரியம்! அம்பலமான தகவல் | What Prince Hari Did When He Was Drunk

இளவரசர் ஹரி செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் மதுபோதையில் சென்ட்ரி பெட்டிக்குள் தடுமாறி விழுந்து தற்செயலாக அபாய ஒலி எழுப்பும் அலாரத்தினை தூண்டியுள்ளார்.

உடனே காவலர் பிரிவைச் சேர்ந்த மூன்று வீரர்கள் விரைந்து வந்து இளவரசை மீட்டு அவரது இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல உதவினர். எனினும் அந்த சமயம் தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் ஹரி கடுமையாக நடந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக அடுத்த நாள் காவலர் அறைக்கு ஒரு கட்டளை அதிகாரி அழைப்பு விடுத்ததாக தங்கள் வட்டாரம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ராணுவ சேவையில் இருந்த அந்த மூத்த வீரர் ஹரி தனது நினைவு குறிப்பான Spare-யில் கூறிய கூற்றுக்களால் கோபமடைந்த பின்னர் இவற்றை தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

மதுபோதையில் இளவரசர் ஹரி செய்த காரியம்! அம்பலமான தகவல் | What Prince Hari Did When He Was Drunk