எதை திருடனும்னு விவஸ்தை இல்லையா! வாய் திறக்காத விஜய்யை கிழித்து தொங்கவிட்ட பயில்வான்…

0
77

தமிழ் சினிமாவில் பத்திரிக்கையாளராகவும், நடிகராகவும் பல வருடங்களாக இருந்து வரும் பயில்வான் ரங்கநாதன், நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற பயில்வான், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சுக்கு விஜய் தான் காரணம் என மோசமாக பேசியுள்ளார்.

அடுத்த சூப்பர் ஸ்டார்

ரசிகர்களும் சரி விஜய் ஆதரவாளர்களும் சரி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொல்லி வருகிறார்கள். எப்போதும் அடுத்த நடிகர் திலகம், அடுத்த மக்கள் திலகம், அடுத்த உலகநாயகன் என்று அடுத்த இடத்தினை பிடிப்பவர்கள் யார் என்று சொல்லிக் கொள்வதில்லை. அப்படித்தான் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டமும். சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். ரஜினிகாந்த் சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் போதே அவரின் பட்டத்தை திருடனும் என்கிற திருட்டு நடந்து வருகிறது. எத திருடனும்-கிற அவஸ்தை இல்லையா என்று படுமோசமாக திட்டியுள்ளார். மேலும் இந்த பிரச்சனை உருவாக காரணம் விஜய் தான்.

விஜய் தான் காரணம்

அடுத்த சூப்பர் ஸ்டார் தான் இல்லை ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று மேடையிலோ ஸ்டேட்மெண்ட் வாயிலாகவோ விஜய் கூறியிருந்தால் இந்த பிரச்சனை எழுந்திருக்காது. என்னதான் விஜய் கோடியில் மார்க்கெட் வைத்திருந்தாலும் ஹிட் கொடுத்தாலும் ரஜினிகாந்த் ஆக்டிவாக இருக்கும் இந்த காலத்தில் இதெல்லாம் தேவையில்லாத பேச்சு என்று கூறுவதை விட்டுவிட்டு இது பற்றி வாய்த்திறக்காமல் இருப்பது தான் காரணம் என்று மேடையில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.