தொண்டை புண்ணை சரிசெய்யும் வீட்டு மருத்துவம்!

0
422

பொதுவாக சளி, இருமல், காய்ச்சல் போன்றவைகள் வந்தாலே சேர்ந்து வந்து ஒட்டிக் கொண்டு பாடாய் படுத்துவது தான் இந்த தொண்டைப் புண்.

குளிர் காலம் மற்றும் மழைக்காலங்களில் தான் இது மிகவும் அதிகரிக்கும். 

அது மட்டுமல்லாமல் குளிர்ச்சியான உணவுகளையும், பிடித்தமான உணவுகளையும் கூட உண்ணமுடியாத ஒரு நிலைமை ஏற்படும். தொண்டையும் எப்போது கரகரப்பாகவே இருக்கும்.

தொண்டைப்புண் மற்றும் தொண்டை அழற்சி

தொண்டைப்புண் அதிகம் ஏற்படுவதற்கான காரணம் வைரஸ், பக்றீரியா, ஒவ்வாமை, மாசு காரணமாகவும் இவை ஏற்படுகின்றன.

தொண்டைப்புண் ஏற்பட்டால் இருமல், மூக்கிலிருந்து நீர் வடிதல், குரலில் மாற்றம் மற்றும் கண்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறும் என்பன படிப்படியான அதிகரிக்கும். மேலும், இவர்களுக்கு சிறிய அளவில் காய்ச்சல் இருக்கும்.

தொண்டை அழற்சிக்கான அறிகுறி திடீர் காய்ச்சல் ஏற்படும் ஆனால் இருமல் இருக்காது. இவர்களுக்கு 100இற்கும் மேல் உடலில் வெப்பநிலை அதிகரித்த காய்ச்சல் இருக்கும். தொண்டை அழற்சி இருப்பவர்களுக்கு வாயின் தொண்டைப் பகுதியில் சிவப்பு நிறத்திலும் வெள்ளை நிறத்தில் திட்டுத்திட்டாக இருக்கும்.

5 நிமிடத்தில் தொண்டை புண்ணை சரிசெய்யும் வீட்டு மருத்துவம்! | Sore Throat Remedies In Tamil

செய்யவேண்டியவை

 1. உப்பு நீரால் வாய் கொப்பளித்தல்
 2. தொண்டை வலிக்கு சுடு நீர் அல்லது எலுமிச்சை நீரில் தேன் கலந்து அருந்துதல்
 3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எலுமிச்சை தண்ணீர்
 4. விரைவான வலி நிவாரணத்திற்கான மருந்துகள்
 5. தொண்டை வலிக்கு சிறந்த தேநீர் வகைகள்
 6. மஞ்சளுடன் பால் கலந்து அருந்துதல்
 7. சளியை போக்க 2 அல்லது 3 தலையணைகளை வைத்து உறங்குதல்
5 நிமிடத்தில் தொண்டை புண்ணை சரிசெய்யும் வீட்டு மருத்துவம்! | Sore Throat Remedies In Tamil

தவிர்க்க வேண்டியவை

 • வாடைக்காற்று
 • புகைத்தல்
 • அமில உணவுகள்
 • கார உணவுகள்
 • உணவுக்குப்பின் உறக்கம்
5 நிமிடத்தில் தொண்டை புண்ணை சரிசெய்யும் வீட்டு மருத்துவம்! | Sore Throat Remedies In Tamil

சேர்த்துக்கொள்ள வேண்டிய இயற்கை மருந்துகள்

 • அதிமதுரம் வேர்
 • மாஸ்மளோ வேர்
 • ஆப்பிள் சாறு வினிகர்
 • மிளகுக்கீரை
 • மூலிகைதேநீர்
 • இலவங்கப்பட்டை
 • பேக்கிங் சோடா
 • மாதுளம்பழம்
 • தங்காளி சாறு
 • கிராம்பு தேநீர்