சஜித் கட்சியில் திடீரென இணைந்த முக்கியஸ்தர்கள்!

0
306

அம்பாறை தேர்தல் தொகுதி, நாமல் ஓயா பிரதேச சபை பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஞானதிலக்க நேற்று முன் தினம் (08-01-2023) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் (Sajith Premadasa) சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.  

திடீரென சஜித் கட்சியில் இணைந்து கொண்ட முக்கியஸ்தர்கள்! | Two Politician Joined Sajith Premadasa Party

இதையடுத்து இன்றைய தினம் (09-01-2023) பிங்கிரிய பிரதேச சபை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் லெஸ்லி குமார எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.  

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானி நளின் பண்டாரவும் கலந்து கொண்டார்.

திடீரென சஜித் கட்சியில் இணைந்து கொண்ட முக்கியஸ்தர்கள்! | Two Politician Joined Sajith Premadasa Party

கடுவலை மாநகர சபை உறுப்பினர் சன்ன பெதும் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். இவர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஆவார்.

திடீரென சஜித் கட்சியில் இணைந்து கொண்ட முக்கியஸ்தர்கள்! | Two Politician Joined Sajith Premadasa Party

இந்த நிகழ்வில் கடுவலை தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் (Hirunika Premachandra) கலந்து கொண்டார்.