அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

0
492

விவசாய அமைச்சின் தலையீட்டில் ஆரம்பமான முட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நளின் பெர்னாண்டோ தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில் முட்டை தவிர்ந்த ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தால் பொறுப்பை ஏற்க தயார் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உற்பத்தியை அதிகரிப்பது தனது பொறுப்பு என்றாலும் முட்டையின் விலையை கட்டுப்படுத்துவது தம்முடைய பணி அல்ல என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு விலை

இதேவேளை முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்ததையடுத்து சந்தையில் முட்டை ஒன்றின் விலை 65 ரூபாவைத் தாண்டி பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலைமையை கட்டுப்படுத்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணைந்து நேற்று முன்தினம் இடைத்தரகர்கள் இன்றி பாரவூர்திகள் மூலம் முட்டை ஒன்றை 55 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

எனினும் நேற்று கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு லொறிகள் வரவில்லை. கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பில் அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குள் முட்டையொன்றை 35 முதல் 45 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.