யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை தொடர்பில் புதிய தகவல்!

0
428

யாழ் – சென்னை விமான சேவை கடந்த 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு இன்று (29-12-2022) இதுவரை 500 பயணிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக பயணித்துள்ளனர்.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு 200 பயணிகள் பயணித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு 300 பயணிகள் பயணித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை ஆரம்பித்த பின்னர் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக மக்கள் பயணிக்க விரும்பி Ticket Booking செய்ய ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.