மகள் மீது பாலியல் துஸ்பிரயோகம்; நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு!

0
309

மதுபோதையில் சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டணை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

அதோடு மகளையே பாலியல் வல்லுறவு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற அனைத்துக்கும் முரணான ஒரு குற்றச் செயலாகும் என சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன், அத்தகைய குற்றத்தைப் புரிந்த குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

சம்பவத்தின் பின்னனி

இந்தச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு தை மாதமளவில் மாங்குளம் பகுதியில் 11 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மீது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டு, தந்தையாகிய எதிரி கைது செய்யப்பட்டு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகிய பாதிக்கப்பட்ட சிறுமி, தாயார் வீட்டில் இல்லாதபோது மதுபோதையில் வந்து தன்னைப் பாலியல் வல்லுறவு புரிந்ததாகத் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

மகள்மீது பாலியல் துஸ்பிரயோகம்; நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு! | Rape Of 11 Year Old Daughter

வவுனியா நீதவானின் உத்தரவின்பேரில் கடந்த 6 மாத காலமாக சிறுவர் இல்லமொன்றில் வசித்து வருவதாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய சட்ட வைத்திய அதிகாரி சட்ட வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

சிறுமியின் சாட்சியத்தை சட்ட வைத்திய அறிக்கை ஒப்புறுதி செய்வதாகக் குறிப்பிட்ட நீதிபதி இளங்செழியன் தந்தைக்கு 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கினார்.

அத்துடன் சிறுமிக்கு 3 லட்ச ரூபா இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் 15 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்தார்.

இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறும் பட்சத்தில் 9 மாதக் கடூழியச் சிறையும், தண்டப் பணம் செலுத்தத் தவறினால் 3 மாத கால சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் மா. இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.